அற்புதம்
மேகம் செய்யும்
சாகசம்-
மழை
கற்றது ......
அறிந்துகொள்ள
ஆர்வமுடன்
சாக்ரடீஸ்-
சாவிலும்
சிந்திக்க ....
சிறகுள்ள
பறவைக்குத்தான்
தெரிகிறது
விரிந்து
பறந்தது
வானம் என்று
இதயக்கோப்பை
காலியான
பாத்திரம் நான்-
காதலியான
கதாபாத்திரம்
என்னில் நிரம்பி
வழிவதற்காக
மகிழ்ச்சியோடு...
கடற் கரைக்குப் போன
காதலர்களைப்போல-
மேகமும்,
வேகமும் இல்லாத
காற்றும்
போராடு
விதி வழியும்
நதி வழியும்-
உயிர் நீத்த
மீன்
காய்க்கும் மரம் .....
கலிலியோவும்
அறிவுக்கனி தந்த
மரம் -
கல்லடிபட்டதால்
யோசிக்க .....
பெருமைக்கு உரியதல்ல
பெண்மைக்கு உரியது -
ஆண்களின் கண்ணீர்
எதிர்பார்
துளிர்த்தாலும்,
காற்றோடு போய்விடும்
நிச்சயம் ஒருநாள்
காவிக்கூட்டம் -
சருகுகளாக
சந்தேகம்
திடமாக இருந்தவன்
கண்ணிலும்
திரவம் -
வாயுவாகப்
போய்விடுமோ
வாழ்க்கை என்று
தேவை ?.........
ஆசிரமங்கள்
அபிவிருத்தி
அடையும்போது -
சந்நியாசம்
வாங்கிக்கொள்கிறது
சேவை
முதலீடல்ல
காதல் ஒரு
வியாபாரம் -
விநியோகம்
செய்யும்போது
சாதிக்கும்
குழந்தையின்
திரவ நம்பிக்கை
கண்ணீர்
எந்நாளும் .....
'என்னாலும் முடியும்' -
நீ கொடுத்த
ஊட்டச் சத்து
கவனம்
தொழுகைக் கூடம்
தொழிற் கூடமாகிறது
வார்த்தைகளால்
வணிகம் தொடங்கும்போது
No comments:
Post a Comment