Thursday, October 28, 2010

அதிரடிக் கவிதைகள்


பக்தி

கூச்சல் அதிகம்
கூட்டுப்பிரார்த்தனையில்
தனித் தனியாய்
பனித்துளிகள்


கல்வி 

ஆசிரியச் சூரியனில்
அறிவுப் பச்சையம்
எதிரில்                                    
மாணவச்செடிகள்

சட்டம்

நீதிமன்றச்
சுத்தியலுங்கூட
அணைப்பூட்டை
உடைக்கவில்லை
வயல் முழுக்க
சாவிக்கொத்துகள் !


அலுவலகம்

நகராத கோப்புகளுடன்
அதிகாரி
தேங்கிய குட்டைக்குள்
பன்றி

வாழ்க்கை

வறண்.....ட
வயற்காட்டில்
ஒரே உயிரெழுத்து
உழவன்

நம்பிக்கை

பாரித் தேராக நீ—அதில்
படர்கொடியாக நான்!
கனவுப்பூக்கள்
உதிராமல் இருக்க
உதிரிப்பூக்களாய்-உன்
புன்னகையே போதும் !

திருமணம்

பெற்றோருக்குத் தகாத
பிள்ளைக்குத் தகும்
கலப்புப் பின்னம்

அழகு

நான்
சாவதற்காக
அவள் பெற்ற
சாகா வரம் !

ஏக்கம்

கண்ணீரை
ஊற்றிக் கொடுத்துவிட்டு
கனவுகளை வருடிக்கொடுக்கிறாயே
அப்படி என்னதான் இருக்கிறது
இதயக்கோப்பையில் ! ?

Friday, October 22, 2010

ஹைக்கூ கவிதைகள்



காதல்

 

பார்வைப் போரில்
உன் புன்னகை
ஏவுகணையா?

காதல் வாகனத்தில்
தீராதவை
பார்வை எரிபொருள் மட்டுமே

அவிழ்ந்து விழுகிற
அவளின் சிரிப்பில்
கவிழ்ந்து விழுந்த
காகிதப் படகு
நான் !



குடிசை
விரித்துக்
கவிழ்க்கப்பட்ட
வாசிக்கப்படாத புத்தகம்



பக்தி


பூக்களே
புண்ணிய தலங்கள்
பக்த கோடிகள்
பறந்து வரும் வண்டுகள்

Thursday, October 21, 2010

அலைபேசி




அழும் கைக்குழந்தைகளில்
ஒன்று காதில்
மற்றொன்று
காலில்