Saturday, December 31, 2016


அன்பிற்கும்  உண்டோ ?

பூமியில்
இருந்து
பீறிட்டுக்கிளம்பிய
நீருற்று -
அன்பில்  நீ


கலையாதே !!!

கண்விழிக்கும் வரை
கனவு எப்படி
உண்மையோ
அப்படியே
நான்
கண்மூடும் வரை
நம் காதலும்

வாழ்த்து 

ஐந்தருவிகளில்                                
பொங்கி வழிவதுபோல்
அகப்பையிலிருந்து
ஆசீர்-
உயர்த்திய  உன்
வலக் கையில்                                                          
இருந்து


உண்மை !!!

அவன்
அணைந்துபோன
பிறகுதான்
தெரிந்தது
'விளக்கும்  எரிவதில்லை
பிராணவாயு இல்லாமல் '
என்று

Friday, December 30, 2016


எச்சரிக்கை

அதிகாரப் பன்றிகள்
வெளுத்து வாங்கின-
கோவணத்
துணிகளை

முதுகெலும்போடு .....

( தென்னம் )
பிள்ளைக்காக
எவன் காலிலும்
விழாத
தென்னை

ஆ.......டு 

மேக
மந்தைகளை
மேய்ந்த
ஓநாய் -
காற்று



பக்தி 

கரைந்துவிடுகிறது
பனித்துளி-
பிரார்த்தனையில்

முடியும் 

தாவிப் பறித்தான்
தன்னம்பிக்கையோடு-
நட்சத்திரங்களை

சிரிப்பு 

எப்போதாவது
சிரிக்கும்-
சிலர் .
எப்போதுமே
சிரிக்கும்-
மலர்

முடியும்......

விடா முயற்சிக்கு
உதாரணம்
ஓடை
ஓ.......  டும் -
விழுந்தும்,
எழுந்தும்.

எச்சரிக்கை  

எதுவும் செய்யும்-
கரைவேட்டியும்,
கரை தாண்டும்
வெள்ளமும் 

Thursday, December 29, 2016


கண்டுபிடித்தேன்! கண்டுபிடித்தேன்!! 


மகிழ்ச்சி மிகுதியில்
நானாகவே
பேசினேன்,
பாடினேன்,
சிரித்தேன்,
ஆடைமறந்து ஓடிய
ஆர்க்கிமெடீசைபோல

காதலர்கள் 

பருவக்காற்று
வீசத்தொடங்கியதும்
நனைந்தார்கள்
குடைபிடிக்காமலே
காதல்மழையில்

ஒற்றைப்பனை 

பிரதி எடுக்கவில்லை
பிரம்மச்சாரியாகவே
நான்

ஏன்?

குளிர்ச்சியில்
மேகத்திற்கு
வியர்த்துக் கொட்டியது -
மழை


கச்சேரி 

ஒத்த
அலை வரிசையில்
காதல் -
சங்கீதம்


வேர்.... ஆசை 

வேர்விட்ட
புல் தரை
நினைவுக்கு
வருகிறது - அது
மிதிப்படும்போது -
'ஆசையே
துன்பத்திற்குக்
காரணம்' என்று சொன்ன
புத்தரை


பணம் பத்தும் .......?

எட்டுப் போடாமல்
வாங்கிய உரிமம்
பத்துப்போட
வைத்துவிட்டது -
பலத்த அடி 

Monday, December 26, 2016


சிந்திப்போம்...

காணவில்லை
சுமை தாங்கிக் கல்லையும்,
மூத்த குடிமக்களையும்-
முதியோர் இல்லங்கள்
முளைத்த பிறகு


கல்லுக்குள் ஈரம் 

தொழில் நுட்ப
வளர்ச்சியில்
தோற்றுப்  போனது
வாழ்க்கை -
கண்ணீரோடு
சுமை தாங்கிக் கல் 

போதை 

காலிக் குவளையும்,
போலிக் கவலையும்
தடம் மாறவும்,
தடுமாறவும்
வைக்கிறது-
நம்பிக்கையால்
நிரம்பாதவர்களை   
முரண் 

சிரித்தால்
ஆயுள் கூடும் -
ரோஜாவுக்கு???
விட்டு வைப்போம்

கை,
கால்,
உடல்,
தழையை
துண்டு
துண்டாக்கியபோது,
துடிதுடித்துப் போனேன்
பேரோடும், புகழோடும் போன
பெரிய மனிதனைவிட,
வேரோடும்,  வேரடி மண்ணோடும்
வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தை நினைத்து. 
உண்ட வீட்டிற்கே .......

பரிமாறியது
இலை
பிராணவாயுவையும்,
நிழல் பாலையும்-
கோடரியோடு
மனிதர்கள்
மரத்தடியில்



துறவு 

காவி
தரித்ததும்
காற்றோடு
காற்றாய்,
மண்ணோடு
 மண்ணாய்,
மனிதனுக்கு
உரமாய்-
இலை

Saturday, December 24, 2016


இளமை

காய்ந்துபோகாமல்
கனவுகளும்,
ஈரத்தோடு
இதயமும்,
இளமையோடு
நானும் -உன்
குறுநகை
கசிவதால்.
நம்பிக்கை 

நம்பிக்கையில்லாமல்
நாட்களை
நகர்த்துவதில்லை
நத்தை



ஆதரவு 

தீ தீயாகவும்
இருப்பதில்லை
நீ நீயாகவும்
இருப்பதில்லை-
அணைத்த பிறகு

Thursday, December 22, 2016


விவசாயம் 

வயல்வெளிகளில்
விரிவாகப்
பேசியது ஆறு
தலையாட்டின
பயிர்கள்-
புரிந்துகொண்டதாய்


பெருங்....காயப்  பை 

பார்வை
தூர்ந்துபோனபிறகும்
வற்றவில்லை
 நினைவு நீரோடை 

Saturday, December 17, 2016

அண்ணா



அண்ணா 

என் அறிவுக்கு எட்டியவரை 
அண்ணாந்தே பார்த்தேன்
 கழுத்து கடுக்க 
அவ்வளவு  உயர்ந்தவர் 
அண்ணா !