Friday, January 13, 2017


இவ்வளவுதான்

மாலை போட்டுவிட்டு
உதிர்ந்தனர்
ஒவ்வொருவராக -
வாழ்க்கை


உணர்ந்துகொள் 

அறம்பொருளில்
மட்டுமல்ல
பரம்பொருளிலும்
இன்பம்-
பக்குவப்படும்போது



கதிர்வீச்சால்
கலவரம்
அடையவில்லை
விவசாயி -
அறுவடைக்கு
நெற்பயிர்

ஏமாற்றிவிடாதே 

பார்வை
கதிர்வீச்சால்
பாதிக்கப்பட்டவன் நான் -
நிவாரணம்
வழங்குவாயா
செரிவூட்டப்பட்ட உன்
புன்னகையால் ?

இப்படியும் 

விரிந்த
உலகத்தில்
நல்ல மனத்தை
தா என்று
கூப்பிய
கைகளோடு
பிரார்த்தனை
செய்தது
பூ

ஓஹோ !!!

அவள்
திரும்பிப்
பார்த்ததும்
தீப்பிடித்து
சுடர்விட்டு
எரிந்தது
நம்பிக்கை -
நிச்சயம்
அணைப்பாள்

வாழ்த்துகள் !

மகிழ்ச்சியோடு
பயணம் -
பொதி
சுமப்பதில்லை
நதி






No comments:

Post a Comment