புரிந்துகொள்
நீ கோபத்தில்
எரியும்போது
அதிகம் தேவைபடுகிறது
ஆக்ஸிஜன்-
மாசுபடாமல்
இருக்கத்தானே
மனித உறவுகள்?
அய்யோ !!!
காற்று
மாசுபட்டு விட்டதால்
மெழுகுவர்த்திகள் !
யோசி
சருகாக
அவன் -
நம்பிக்கை
உதிர்ந்தபின்
அடடா
திரும்பிப்
பார்க்காமல் நீ
போகிறாயோ என்று
நான்
திரும்பிப்
பார்த்தபோது
தெரிந்தது - நீ
விரும்பிப்
பார்க்கிறாய் என்று
அழகு
ஆடை கட்டிய
ஓடை அவள் -
தன்னை
புதுப்பித்துக்கொண்டே
இருப்பதால்
உயிர்ப்போடிறு
விதிவழியும்
நதிவழியும் -
உயிர் நீத்த
மீன்
சத்தியம்
உண்மைக்கு
நெருக்கமானவர்கள் -
ஊருக்கு
ஒதுக்குப்புறமானவர்கள்
வேண்டு(ம்)
ஆண்டவனின்
ஆசீராக
விழுந்தது -
பிரார்த்தனையாக
எழுந்த
நீர்
மனிதா?
பறவைகளின்
பாதையில்
இல்லை -
போக்குவரத்து
நெரிசல்
மெதுவாக
வேக வேகமாய்
விழுங்கினான்
மனிதன் -
அசை போட்டது
மாடு ???
அறிவுரை
மண்
பயனுற வேண்டும் -
மழைப் பிரசங்கம்
No comments:
Post a Comment